Paristamil Navigation Paristamil advert login

மாதம் முழுவதும் தடைப்படும் - 14 ஆம் இலக்க மெற்றோ!

மாதம் முழுவதும் தடைப்படும் - 14 ஆம் இலக்க மெற்றோ!

21 ஐப்பசி 2023 சனி 11:35 | பார்வைகள் : 8240


பல்வேறு திருத்தப்பணிகள் மற்றும் விஸ்தரிப்பு பணிகள் காரணமாக 14 ஆம் இலக்க மெற்றோ வரும் நவம்பர் 5 ஆம் திகதி வரை நிறுத்தப்பட உள்ளது.

நாளை ஒக்டோபர் 22 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முதல், நவம்பர் 5 ஞாயிற்றுக்கிழமை வரை 14 ஆம் இலக்க மெற்றோ நிறுத்தப்பட உள்ளது. 

பின்னர் நவம்பர் 18, 19 ஆம் திகதிகளிலும் 26 ஆம் திகயும் மீண்டும் நிறுத்தப்பட உள்ளது. 

வடக்கு மற்றும் தெற்கு நோக்கிய விஸ்தரிப்பு பணிகள் இடம்பெற உள்ளதாக மேற்குறித்த திகதிகளில் சேவை தடைப்பட உள்ளது. மாற்றீடாக பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக RATP வெளியிட்ட புகைப்படம் ஒன்றை கீழே காணலாம்.

வர்த்தக‌ விளம்பரங்கள்