லியோ படத்தின் சரிவுக்கு காரணம் யார் ?
21 ஐப்பசி 2023 சனி 14:15 | பார்வைகள் : 3745
லியோ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. இருப்பினும் இந்த படத்தை குறித்த நெகட்டிவ் கமெண்ட்களும் சோசியல் மீடியாவில் குவிகிறது. என்னதான் விஜய் இந்த படத்தில் மாஸ் ஹீரோவாக பின்னி பெடல் எடுத்தாலும், இது லோகேஷ் படம் என்று சொன்னால் ரசிகர்களால் ஒத்துக்கொள்ள முடியவில்லை.
இதற்கு முன்பு லோகேஷ் எடுத்த கைதி, விக்ரம் படத்திற்கு முன்னால் லியோவால் நிக்க முடியவில்லை. அந்த அளவிற்கு கதையை சொதப்பி வைத்துவிட்டனர். இதற்கு காரணம் என்ன என்பதை லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித் வெளிப்படையாக சொல்லி, ஒத்துக் கொண்டார். பீஸ்ட், வாரிசு படத்திற்கு முன்பு விஜய் லோகேஷின் லியோ படத்தில் நடிப்பதாக இருந்தது. அதற்கான கதையை எல்லாம் விஜய் ஏற்கனவே கேட்டுவிட்டு ஓகே சொல்லிவிட்டார்.
லோகேஷ் விக்ரம் படத்தில் பிஸியாக இருந்ததால் பீஸ்ட், வாரிசு படத்தை முடித்துவிட்டு அடுத்து லியோ படத்தில் இணைந்தார். லியோ படத்தின் கதையை தயாரிப்பாளர் லோகேஷ் கேட்ட பிறகு விஜய்க்கும் லலித்துக்கும் கதையில் ஒரு சில மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என வற்புறுத்தி உள்ளனர். இதனால் லோகேஷ் நினைத்து வைத்திருந்த படத்தின் கதையை இவர்கள் இருவரும் தான் சேர்ந்து மாற்றிவிட்டனர்.
வேறு வழி இல்லாமல் லோகேஷும் இவர்கள் சொன்னபடி கதையை மாற்றியதால் தான் தற்போது இப்படிப்பட்ட விளைவை சந்தித்திருப்பதாக லலித் பகிரங்கமாக ஒத்துக் கொண்டார். ஒருவேளை லோகேஷ் வழியிலேயே படத்தை எடுத்திருந்தால் நிச்சயம் அது சூப்பராக வந்திருக்கும். தேவை இல்லாமல் விஜய், லலித் இருவரும் லோகேஷின் மண்டையை கழுவி லியோ படத்தை கிழித்து கந்தலாக்கிவிட்டனர்.
லியோ படத்தின் சரிவுக்கு இவர்கள்தான் காரணம். அதுவும் விஜய் இந்த படத்தில் திரிஷாவுடன் லிப் லாக் சீன் வேண்டும் என்று அடம் பிடித்து கேட்டு வாங்கி இருக்கிறார். பக்கா ஆக்சன் படமாக லோகேஷ் லியோவை எடுக்க பார்த்திருக்கிறார். ஆனால் இந்த படத்தின் இரண்டாம் பாதியை சொதப்பிவிட்டனர். 40 நிமிஷம் பைட் சீன் தான் இருக்கிறது. இந்த பைட் சீன்க்கு குறைந்த காட்சிகளை மட்டுமே லோகேஷ் வைத்திருந்தார்,
ஆனால் லலித் வற்புறுத்துதலின் பெயரில் தான் அதை இன்னும் கொஞ்சம் நீட்டி விட்டிருக்கின்றனர். அவர் மட்டுமல்ல விஜய்யும் லோகேஷை அவர் போக்கில் விடாமல் இழுத்துப் பிடித்ததால் தான் இரண்டாம் பாதியில் அவருடைய அசிஸ்டன்ட் டைரக்டர் ரத்ன குமாரை எடுத்துச் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். அதனால் தான் படம் இவ்வளவு மோசமாக வந்திருக்கிறது.