Paristamil Navigation Paristamil advert login

அதிக மருத்துவ பயன்கள் கொண்ட சப்போட்டா பழத்தை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை…

அதிக மருத்துவ பயன்கள் கொண்ட சப்போட்டா பழத்தை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை…

22 ஐப்பசி 2023 ஞாயிறு 06:06 | பார்வைகள் : 2716


பொதுவாக எந்த வகை பழங்கள் சாப்பிட்டாலும் உடலுக்கு நன்மை தரும் என்று கூறப்படும் நிலையில் அவற்றில் சப்போட்டா பழத்தில் அதிக நன்மைகள் இருப்பதாக கூறப்படுகிறது.

அஜீரண கோளாறு உட்பட பல வகை நோய்களை சப்போட்டா பழம் தீர்க்கும் என்று கூறப்படுகிறது. சப்போட்டா பழத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் ரத்த அழுத்தத்தை சீர்படுத்தும் என்றும் தினமும் ஒரு சப்போட்டாவை சாப்பிட்டால் ரத்த அழுத்தத்தை சீர்படுத்தி சமநிலையில் வைத்திருக்கும் என்று தெரிகிறது.

மேலும் சப்போட்டாவை சாப்பிட்டால் ஜலதோஷம் காய்ச்சல் போன்ற நோய்களிலிருந்து பாதுகாக்கப்படும்,  சப்போட்டாவை சாப்பிடுவதால் சிறுநீரகம் தொடர்பான நோய்களிலிருந்து நாம் தப்பித்துக் கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.  

ஆனால் அதே நேரத்தில் அளவுக்கு அதிகமாக சப்போட்டா பழங்களை சாப்பிட்டால் வாயில் புண் அல்லது அரிப்பு ஏற்படும் என்றும் நன்கு பழுக்காத பச்சையான சப்போட்டாவையும் சாப்பிட கூடாது என்றும் கூறப்படுகிறது.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்