ஹமாஸ் தாக்குதலில் 30 பிரெஞ்சு மக்கள் பலி! - ஏழு பேரைக் காணவில்லை!

21 ஐப்பசி 2023 சனி 17:29 | பார்வைகள் : 9926
ஹமாஸ் தாக்குதலில் கொல்லப்பட்ட பிரெஞ்சு மக்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்வடைந்துள்ளது.
பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் இத்தகவல்கள்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. பலியான பிரெஞ்சு மக்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்வடைந்துள்ளது. அதேவேளை, காணாமல் ஏழு பேர் தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை எனவும், ஹமாஸ் அமைப்பினரால் அவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹமாஸ் அமைப்பினரிடம் மொத்தமாக 203 பேர் பணயக்கைதிகளாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்களின் பிரெஞ்சு மக்கள் எத்தனை பேர் உள்ளனர் என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
1 நாள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1