சிறுவர்களிடையே மனநோயாக மாறியுள்ளது - பிரான்சை உலுக்கும் வெடிகுண்டு அச்சுறுத்தல்கள்!
22 ஐப்பசி 2023 ஞாயிறு 05:01 | பார்வைகள் : 6735
பாடசாலைகள், சுற்றுலாத்தலங்கள், விமான நிலையங்கள் மீது தொடர்ச்சியாக விடுக்கப்படும் போலி வெடிகுண்டு அச்சுறுத்தல் காரணமாக தற்போது 22 விசாரணைகள் இடம்பெற்றுக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“போலி வெடிகுண்டு அச்சுறுத்தல் தொடர்பாக தற்போது 22 விசாரணைகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை தொடர விடமாட்டோம்!” என நீதித்துறை அமைச்சர் Eric-Dupond-Moretti நேற்று சனிக்கிழமை தெரிவித்தார்.
‘குறிப்பாக சிறுவர்கள், எவ்வித பொறுப்புணர்வும் இன்றி விமான போக்குவரத்துக்களை தடைப்படுத்துகின்றனர். அது ஒரு மனநோயாக மாறியுள்ளது.” என அவர் மேலும் தெரிவித்தார்.
கடந்த வியாழக்கிழமை பிரான்சில் 11 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு, வெளியேற்றப்பட்டிருந்தது. விமான சேவைகளும் தடைப்பட்டிருந்தன. அன்றைய நாளில் 18 பேர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.