விக்ரமின் புதிய திரைப்பட அப்டேட் வெளியானது !

22 ஐப்பசி 2023 ஞாயிறு 05:50 | பார்வைகள் : 8443
விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் 'துருவ நட்சத்திரம்'.இந்த படத்தை கௌதம் மேனன் இயக்கியுள்ளார். இதில் ரிது வர்மா,பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் பணிகள் 2017 ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டு 2018 ஆம் ஆண்டில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில்,சில காரணங்களால் தள்ளிப்போனது.இதையடுத்து சமீபத்தில் இந்த திரைப்படம் வரும் நவம்பர் 24 ம் திகதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்த நிலையில்,'துருவ நட்சத்திரம்' திரைப்படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி, இந்த திரைப்படத்தின் டிரைலர் இம்மாதம் 24 ஆம் திகதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை போஸ்டர் ஒன்றை வெளியிட்டு இயக்குநர் கௌதம் மேனன் தனது சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார்.இந்த போஸ்டர் இன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025
-
1