Paristamil Navigation Paristamil advert login

கரை ஒதுங்கிய கடல் கன்னி -   ஆராய்ச்சியாளர்கள் தகவல்...?

கரை ஒதுங்கிய கடல் கன்னி -   ஆராய்ச்சியாளர்கள் தகவல்...?

22 ஐப்பசி 2023 ஞாயிறு 08:16 | பார்வைகள் : 1793


விசித்திரமான மற்றும் வினோதமான தோற்றமுடைய "கடற்கன்னி" பப்புவா நியூ கினியாவின் கரையில் கரையொதுகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தென்மேற்கு பசிபிக் கடல் பகுதியில் உள்ள நாடு, பப்புவா நியூ கினியா பகுதியில் உள்ள கடற்கரையில் உள்ள சிம்பேரி தீவு பகுதியில் கடற்கன்னியை போன்ற தோற்றமுடைய விசித்திர உயிரினம் ஒன்றின் உடல் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. 

இத்தகைய உயிரினங்கள் "கிளாப்ஸ்டர்" (globster) என அழைக்கப்படுவதாக "லைவ் சைன்ஸ்" எனும் அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கிறது.

தற்போது கரை ஒதுங்கியிருக்கும் இந்த "கிளாப்ஸ்டர்" உயிரினத்தின் உடல் எடை, நீளம், மற்றும் இவை எவ்வாறு உருவாகின்றன என்பது பற்றி தெரிந்துக்கொள்வது மிகவும் கடினம் எனவும் ஆழ்கடல் ஆராய்ச்சி நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள்.

மேலும் இது கடற்வாழ் பாலூட்டி உயிரினங்கள் எனவும், உயிரிழந்து கடலிலேயே நீண்ட நாட்கள் பிற மீன்களால் உண்ணப்பட்டு தோல் மற்றும் மாமிசத்தை இழக்கும் திமிங்கிலம், டால்பின் போன்ற உயிரின வகைகள் அடையும் நிறத்தைய தற்போது கரை ஒதுங்கியிருக்கும் "கிளாப்ஸ்டர்" கொண்டிருப்பதால், இதுவும் ஒரு திமிங்கில வகையாக இருக்கலாம் என தெரிவித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்