Paristamil Navigation Paristamil advert login

இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

 இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

22 ஐப்பசி 2023 ஞாயிறு 08:36 | பார்வைகள் : 5962


பெய்துவரும்  பலத்த மழை காரணமாக பதுளை மாவட்டத்தில் நீர்வீழ்ச்சிகளுக்கு அருகில் நீராடுவதை தவிர்க்குமாறு மாவட்ட செயலாளர் பிரபாத் அபேவர்தன வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடும் மழை காரணமாக நீர்வீழ்ச்சிகளில் வழமைக்கு மாறாக நீர் பெருகும் அபாயம் காணப்படுவதாக மாவட்ட செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் மற்றும் ஏனைய மக்கள் நீர்வீழ்ச்சிகளை சுற்றி நீராடுவதை தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுக்கப்படுவதாக பதுளை மாவட்ட செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

பண்டாரவளை பகுதியில் பெய்து வரும் கடும் மழை காரணமாக ராவணா நீர்வீழ்ச்சியின் நீர் சடுதியாக அதிகரித்துள்ளதாக பதுளை மாவட்ட செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்