Paristamil Navigation Paristamil advert login

கொரோனா தடுப்பூசி தொடர்பில் வெளியாகிய எச்சரிக்கை தகவல்

கொரோனா தடுப்பூசி தொடர்பில் வெளியாகிய எச்சரிக்கை தகவல்

22 ஐப்பசி 2023 ஞாயிறு 09:19 | பார்வைகள் : 4301


கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு கொரோனா தடுப்பூசி பெரும் பங்கு வகித்துள்ளது.

இந்நிலையிவ் பைசரின் கொரோனா தடுப்பூசியில் புற்றுநோயை உண்டாக்கும் சிமியன் வைரஸ் 40 (SV40) டிஎன்ஏ வரிசை உள்ளதாக கனடா எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இது தொடர்பாக ஹெல்த் கனடா அமைப்பு  வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

புற்றுநோயை உண்டாக்கும் சிமியன் வைரஸ் 40 (SV40) டிஎன்ஏ வரிசை ஃபைசரின் கொரோனா தடுப்பூசியில் இருந்ததாக கூறப்பட்டுள்ளது.

பைசர் கொரோனா தடுப்பூசி உலகின் பல்வேறு நாடுகளிலும் பயன்படுத்தப்பட்டு வந்த போதிலும், இது தொடர்பாக ஃபைசர் முன்கூட்டியே எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து ஹெல்த் கனடா அமைப்பு அங்குள்ள உள்ளூர் ஊடகங்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளது.

அதில், "​​பிளாஸ்மிட்டிற்குள் (SV40) உயிரியல் DNA வரிசைகளை இருக்கிறதா என்பதைக் கண்டறிய  அனுசரணையாளர்களை எதிர்பார்க்கிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.

கனடா நேரடியாகப் புற்றுநோயை உண்டாக்கும் சிமியன் வைரஸ் 40 டிஎன்ஏ அதில் இருக்கிறது எனக் கூறவில்லை என்றாலும் அதற்கான ஆய்வுகளைச் செய்கிறது என மட்டும் அறிவித்துள்ளது.

அதேநேரம் இந்த புற்றுநோயை உண்டாக்கும் வைரஸ் இருப்பு புகார் இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்