Paristamil Navigation Paristamil advert login

கார்த்தியின் அதிரடி திட்டம்..!

கார்த்தியின் அதிரடி  திட்டம்..!

22 ஐப்பசி 2023 ஞாயிறு 10:55 | பார்வைகள் : 3213


கார்த்தி நடித்த ’கைதி’ மற்றும் சர்தார்’ ஆகிய படங்களின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக இருக்கும் நிலையில் அவர் நடித்த இன்னொரு சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகமும் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த ’கைதி’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக இருப்பதாகவும் அனேகமாக ’தலைவர் 171’ படத்தை முடித்ததும் லோகேஷ் கனகராஜ் ’கைதி 2’ படத்தை இயக்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

அதேபோல் நேற்றுடன் ’சர்தார்’ வெளியாகி ஒரு வருடம் நிறைவடைந்ததை அடுத்து ’சர்தார் 2 ’படம் விரைவில் உருவாகும் என்றும் கார்த்தி அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது எச் வினோத் இயக்கத்தில் கார்த்தி நடித்த ’தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் இரண்டாம் பாகமும் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. எச் வினோத் தற்போது கமல்ஹாசன் படத்தை இயக்கும் பணியில் உள்ள நிலையில், இந்த படத்தை முடித்துவிட்டு அவர் ’தீரன் அதிகாரம் ஒன்று 2’ படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்