Paristamil Navigation Paristamil advert login

லியோ படத்தின் முதல் நாள் வசூல் என்ன தெரியுமா?

லியோ படத்தின் முதல் நாள் வசூல் என்ன தெரியுமா?

20 ஐப்பசி 2023 வெள்ளி 06:12 | பார்வைகள் : 2805


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘லியோ’ திரைப்படம் தமிழகத்தில் வெளியானது. அதிகாலை 04.00 மணி மற்றும் 07.00 மணி காட்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், காலை 09.00 மணிக்கு வெளியானது ‘லியோ’. தமிழகத்தில் ‘லியோ’ திரைப்படம் வெளியாகியுள்ள திரையரங்குகளில் ரசிகர்கள் ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக, தமிழகம் முழுவதும் சுமார் 900 திரையரங்குகளில் லியோ படத்தின் முதல் காட்சி வெளியானது.

தமிழகத்தைத் தொடர்ந்து, புதுச்சேரியிலும் ‘லியோ’ திரைப்படம் வெளியானது. அதேபோல், கன்னியாகுமரி மாவட்டம், கேரள எல்லை பகுதி மற்றும் கேரளாவில் ‘லியோ’ திரைப்படத்தின் அதிகாலை 04.00 மணி காட்சி திரையிடப்பட்டது. தமிழக எல்லையில் 2 திரையரங்குகள், கேரளாவில் 655 திரையரங்குகளில் அதிகாலை 04.00 மணி காட்சி திரையிடப்பட்டது. ஆந்திரா மாநிலம், சித்தூர் மற்றும் திருப்பதி ஆகிய மாவட்டங்களில் ‘லியோ’ திரைப்படத்தின் அதிகாலை 05.00 மணி காட்சி வெளியானது. ரசிகர்கள் மட்டுமன்றி படத்தின் இசை அமைப்பாளர் அனிருத், இயக்குநர் லோகேஷ், நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோரும் படத்தை பார்க்க சென்னை வெற்றி திரையரங்கிற்கு சென்றனர்.

இந்நிலையில், லியோ படத்தின் முதல் நாள் வசூல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, முதல் நாளில் 120 கோடி ரூபாய்க்கு மேல் லியோ வசூல் ஈட்டியுள்ளது. தமிழ்நாட்டில் 27 கோடி ரூபாய், ஆந்திரா தெலங்கானாவில் 13 கோடி ரூபாய், கேரளாவில் 10 கோடி ரூபாய், கர்நாடகாவில் 11 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. விஜய்யின் திரை வாழ்க்கையில் முதல் நாளில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்த முதல் திரைப்படம் என்ற சாதனையும் படைத்துள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்