தென்கிழக்கு பிரான்சில் பலத்த மழை! - Alpes-Maritimes மாவட்டத்துக்கு சிவப்பு எச்சரிக்கை!

20 ஐப்பசி 2023 வெள்ளி 06:31 | பார்வைகள் : 9373
பிரான்சின் தென்கிழக்கு பிராந்தியங்களில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. Alpes-Maritimes உள்ளிட்ட ஏழு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் பலத்த மழை பெய்யும் எனவும், அதிகபட்சமாக 200 மில்லிமீற்றர் மழை பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Alpes-Maritimes மாவட்டத்துக்கு அதிகபட்சமாக சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
அங்கு உள்ள அனைத்து மழலையர் மற்றும் ஆரம்ப பாடசாலைகள் அனைத்தும் ஒன்று மூடப்பட்டுள்ளன.
அதேவேளை, 140 கி.மீ வேகத்தில் புயல் வீசும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025