இரு வாரங்களாக நீடிக்கும் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போர்...
20 ஐப்பசி 2123 புதன் 06:40 | பார்வைகள் : 4298
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படையினர் இடையேயான போர் இரண்டு வாரங்களை கடந்து நீடித்து வருகின்றது.
போரின் தாக்கத்தால் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் வீடியோ ஊடகங்களில் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் தெற்கு காசாவில் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியதாக எழுந்த புகாரை இஸ்ரேல் மறுத்துள்ளது.
புதன் கிழமை இரவு தெற்கு காசாவில் டெல் அல் அவா நகரில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் சிதைந்த கட்டிட இடிபாடுகளில் சிக்கிய குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமான பாலஸ்தீனர்களை மீட்கும் வீடியோ ஊடகங்களில் வெளியாகி உள்ளது.
இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நகரில் ஹமாஸ் படையினர் ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தினர்.
இதனால் டெல் அவிவ் நகரில் புதன்கிழமை இரவு அபாய சங்கு ஒலித்ததாக தகவல் வெளியானது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போரில் பாலஸ்தீனம் தரப்பில் 3,600 பேரும் இஸ்ரேல் தரப்பில் 1,400 பேரும் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.