விசா கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் நடவடிக்கைகளில் ஐரோப்பிய ஒன்றியம்
20 ஐப்பசி 2023 வெள்ளி 08:01 | பார்வைகள் : 4373
ஈரான், ரஷ்யா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 88,000 நபர்களுக்கு ஐந்து கரீபியன் நாடுகள் குடியுரிமையை விற்பனை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
க ஐரோப்பிய ஆணையம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், குறிப்பிட்ட சில நாடுகள் வெளிநாட்டவர்களுக்கு சுமார் 100,000 டொலர் தொகைக்கு குடியுரிமையை விற்றுள்ளது.
சுமார் 70,000 மக்கள் தொகை கொண்ட டொமினிகா தீவானது 34,500 கடவுச்சீட்டுகளை விற்றுள்ளது.
St Kitts and Nevis நாடானது 36,700 கடவுச்சீட்டுகளை விற்றுள்ளது.
இங்குள்ள மொத்த மக்கள் தொகை 48,000 என்றே கூறப்படுகிறது.
ஒட்டுமொத்தமாக ஐந்து கரீபியன் தீவு நாடுகள் 88,000 கடவுச்சீட்டுகளை வெளிநாட்டவர்களுக்கு விற்றுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளில் ஆண்டுக்கு 90 நாட்கள் விசா இன்றி பயணிக்கலாம் என்ற விதிவிலக்கு 2015ல் டொமினிகா தீவுக்கு அளிக்கப்பட்டது.
கடவுச்சீட்டு விற்பனை அதிகரித்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
2009ல் இருந்தே St Kitts தீவுக்கு இந்த விசா இல்லாத பயணம் அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக 60 நாடுகளுக்கு விசா இல்லாத பயண ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது ஐரோப்பிய ஒன்றியம்.
வெளிநாட்டவர்களுக்கு இப்படியான சிறப்பு கடவுச்சீட்டு விற்பனை செய்வதால் பல்வேறு குற்றச்செயல்கள் முன்னெடுக்கப்படலாம் எனவும் ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் விசா இல்லாத பயணம் மேற்கொண்ட 150,000 பயணிகள், பின்னர் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளில் புகலிடம் கோரியதாகவும் கூறப்படுகிறது.
அத்துடன் இந்த golden passports பிரிவில் விண்ணப்பிக்கும் பலர் சீனா, ரஷ்யா, சிரியா, ஈரான், ஈராக், ஏமன், நைஜீரியா மற்றும் லிபியா நாட்டவர்கள் எனவும், இந்த நாடுகளில் முறைகேடுகள் உச்சத்தில் இருப்பதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.