Paristamil Navigation Paristamil advert login

பயப்படாதீங்க இது சோதனைதான் - அபாய எச்சரிக்கை ஒலியுடன் செல்போனுக்கு வந்த குறுஞ்செய்தி..!

பயப்படாதீங்க இது சோதனைதான் - அபாய எச்சரிக்கை ஒலியுடன் செல்போனுக்கு வந்த குறுஞ்செய்தி..!

20 ஐப்பசி 2023 வெள்ளி 16:26 | பார்வைகள் : 2757


பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்கு அவசரகால எச்சரிக்கை தகவலை அனுப்பும் 'செல் ஒலிபரப்பு எச்சரிக்கை' திட்டத்தின் சோதனை ஓட்டம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடங்கியுள்ளது

செல் ஒலிபரப்பு எச்சரிக்கை'' முறை என்பது ஒரு அதிநவீன தொழில்நுட்பமாகும். இதில் ஒரு செல்போன் கோபுரத்தின் குறிப்பிட்ட எல்லைக்குள் உள்ள அனைத்து செல்போன்களுக்கும், இயற்கை இடர்பாடு குறித்த எச்சரிக்கைகள் ஒரே நேரத்தில் சென்றடையக்கூடிய வசதி உள்ளது.

சுனாமி, மழை, வெள்ளம், பூகம்பம் போன்ற கடுமையான வானிலை எச்சரிக்கைகள், பொது பாதுகாப்பு செய்திகள், வெளியேற்ற அறிவிப்புகள் மற்றும் பிற அவசரகால எச்சரிக்கைகளை வழங்க ''செல் ஒலிபரப்பு எச்சரிக்கை'' பயன்படுத்தப்பட உள்ளது. இந்த தொழில்நுட்பம் பேரிடர் எச்சரிக்கை தகவல்கள், சாத்தியமான அச்சுறுத்தல்கள் மற்றும் நெருக்கடியான சூழ்நிலைகளை பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் பரவலாக தெரிவிக்க பயன்படுத்தப்பட உள்ளது

தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையமும், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையமும் மத்திய அரசின் தொலைத்தொடர்பு துறையுடன் இணைந்து, 'செல் ஒலிபரப்பு எச்சரிக்கை' சோதனையை தற்போது தொடங்கியுள்ளது.

முதற்கட்டமாக ஏர்டெல் பயனர்களுக்கு அபாய எச்சரிக்கை ஒலியுடன் தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு உள்ளது. இதன் தொடர்ச்சியாக மற்ற பயனர்களுக்கும் விரைவில் இந்த அபாய எச்சரிக்கை அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்