Paristamil Navigation Paristamil advert login

தமிழினத்தை காட்டிக்கொடுத்து அழித்த பிள்ளையான் - அம்பலப்படுத்தும் இராணுவம்

தமிழினத்தை காட்டிக்கொடுத்து அழித்த பிள்ளையான் - அம்பலப்படுத்தும் இராணுவம்

20 ஐப்பசி 2023 வெள்ளி 12:26 | பார்வைகள் : 6661


விடுதலைப் புலிகள் தொடர்பான தகவல்களை எமக்கு பிள்ளையான் வழங்குவதாக சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் புலனாய்வு அதிகாரியான மொனரவில தெரிவித்துள்ளார்.  

இராணுவத்தின் புலனாய்வு பிரிவில் செயற்பட்ட ‘திரிப்போலி’ குழுவின் பிள்ளையான் செயற்பட்டதாக அவர் தெரிவித்தார். 

இராணுவப் புலனாய்வு பிரிவில் ஒரு சிறிய தனிக்குழுவொன்று உள்ளது. அந்தக் குழுதான் ‘திரிப்போலி’ என்ற கொலைக் கும்பல்.  2009ஆம் ஆண்டின் பின்னரே அது உருவாக்கப்பட்டது. 

அரசியல் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காகவே அந்தக் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவே பிள்ளையானுக்கு வெள்ளை ஆடை அணிவித்து அழகுபடுத்தியதாக மொனரவில தெரிவித்துள்ளார். 

பிள்ளையான் எனும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தற்போது ராஜாங்க அமைச்சராக செயற்பட்டு வருவதுடன், கிழக்கு மாகாணத்தில் கட்டப்பஞ்சாயத்து நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்