Paristamil Navigation Paristamil advert login

டைட்டன் நீர்மூழ்கி கப்பல் விபத்து சினிமா ஆகிறதா?

 டைட்டன் நீர்மூழ்கி கப்பல் விபத்து சினிமா ஆகிறதா?

20 ஐப்பசி 2023 வெள்ளி 13:35 | பார்வைகள் : 2600


டைட்டானிக் கப்பலுக்கும் சினிமாவிற்கும் நெருக்கமான தொடர்பு எப்போதும் இருந்து வந்திருக்கிறது. வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலின் ஆழத்தில், டைட்டானிக் கப்பல் மூழ்கியதை வைத்து பல டாக்குமெண்டரிகள் வந்துள்ளன. என்றாலும் ஜேம்ஸ் கேமரூன் டைட்டானிக் மூழ்கிய கதையோடு ஒரு கற்பனை காதலையும் இணைத்து சொன்ன படம்தான் உலக அளவில் இப்போதும் பேசப்படுகிறது.

மூழ்கிய டைட்டானிக் கப்பலை நீர்மூழ்கி கப்பலில் சென்று பார்த்து வருவதை தனி சுற்றுலாவாக நடத்தி வருகிறார்கள். இதற்காக சில நிறுவனங்கள் உள்ளன. இதற்கு பல கோடி ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. கடந்த ஜூன் மாதம் டைட்டன் என்ற நீர்மூழ்கி கப்பலில் 5 கோடீஸ்வரர்கள் பயணித்தார்கள். புறப்பட்ட சில மணி நேரங்களிலேயே அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டது. பேரழுத்தம் காரணமாக நீர்மூழ்கி வாகனம் உடைந்ததில், அதில் இருந்த 5 பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

இந்த விபத்தை அடிப்படையாகக் கொண்டு திரைப்படம் உருவாக இருப்பதாகவும், அதை பிரபல இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. ஆனால் ஜேம்ஸ் கேமரூன் அதை மறுத்தார்.

இந்நிலையில் மைண்ட் ரியாட் என்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனம் இந்தச் சம்பவத்தை படமாக்க இருப்பதாகத் அறிவித்துள்ளது. 'சால்வேஜ்ட்' (காப்பாற்று) என்று பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தொடங்கி விட்டதாகவும், விரைவில் முறையான அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்