இலங்கை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே மீது தாக்குதல்!

20 ஐப்பசி 2023 வெள்ளி 15:07 | பார்வைகள் : 7292
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் பெரேரா தம்மை தாக்கியதாக இராஜாங்க அமைச்சர் டயனா கமகே குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள நூலகத்துக்கு அருகாமையில் வைத்து இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்தினால் நாடாளுமன்ற அமர்வு 10 நிமிடங்கள் வரை ஒத்திவைக்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.