Paristamil Navigation Paristamil advert login

மதவாத உணர்வுகொண்ட மாணவர்கள் பாடசாலையில் இருந்து நீக்கம்..??

மதவாத உணர்வுகொண்ட மாணவர்கள் பாடசாலையில் இருந்து நீக்கம்..??

20 ஐப்பசி 2023 வெள்ளி 15:23 | பார்வைகள் : 6115


மதவாத உணர்வுகொண்ட மாணவர்களை பாடசாலையில் இருந்து நீக்குவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் Gabriel Attal தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளில் இஸ்லாமிய கலாச்சார உடை அணிவதற்கு தடை விதிகப்பட்டுள்ள நிலையில், அதற்கு அடுத்ததாக தீவிர மதவாதத்தை பின் தொடரும் மாணவர்களை பாடசாலைகளில் இருந்து நீக்குவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. “அடிப்படைவாதம் அல்லது மதவாதம் கொண்ட மாணவர்களை பள்ளிக்கு அனுப்புவதை விட வேறு தீர்வு காண வேண்டும்.” என Gabriel Attal குறிப்பிட்டார்.

“இந்த மாணவர்களை வகுப்பறைகளில் இருந்து “வெளியேற்றுவதற்கு” “நடவடிக்கைகளை மேற்கொள்வதாக” உறுதியளித்தார். "அவர்களுக்கு இடமளிக்கக்கூடிய சிறப்பு கட்டமைப்புகள் பற்றி நாம் சிந்திக்க வேண்டும்” எனவும் தெரிவித்தார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்