கண்காணிக்கப்படும் WhatsApp குறுந்தகவல்கள்! - உள்துறை அமைச்சர்!!

20 ஐப்பசி 2023 வெள்ளி 17:01 | பார்வைகள் : 9240
மதவாதம் கொண்ட நபர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களது WhatsApp செயலி கண்காணிக்கப்படும் என உள்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
“cryptage de bout en bout” என அழைக்கப்படும் பிற நபர்களால் கண்காணிக்க முடியாத குறுந்தகவல்களை தேவை கருதி அவை பார்வையிடப்படும் என அமைச்சர் தெரிவித்தார். WhatsApp, Signal, Telegram போன்ற செயலிகளில் இந்த “cryptage de bout en bout” வசதி உள்ளதால் பயங்கரவாதிகளால் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
எனவே சந்தேகத்துக்கு இடமானவர்கள் பயன்படுத்தும் மேற்படி செயலிகளில் பரிமாறப்படும் தகவல்கள் உடைக்கப்பட்டு (décryptage) அவை கண்காணிக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.