Paristamil Navigation Paristamil advert login

லியோ' கொண்டாட்டத்தில் நடந்த விபரீதம்! லோகேஷ் கனகராஜ் மருத்துவ மனையில் அனுமதி..?

லியோ' கொண்டாட்டத்தில் நடந்த விபரீதம்! லோகேஷ் கனகராஜ் மருத்துவ மனையில் அனுமதி..?

24 ஐப்பசி 2023 செவ்வாய் 10:04 | பார்வைகள் : 2128


'லியோ' பட இயக்குனர்,  லோகேஷ் கனகராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகி உள்ள தகவல், திரையுலகினர் மற்றும் தளபதி ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூரைச் சேர்ந்த லோகேஷ் கனகராஜ், எம்பிஏ படித்துவிட்டு, ஒரு தனியார் வங்கியில் வேலை செய்து வந்த நிலையில், திரைப்பட இயக்கம் மீது உள்ள ஆர்வத்தின் காரணமாக குறும்படங்கள் மூலம் தன்னுடைய திறமையை வெளிப்படுத்த துவங்கினார். அந்த வகையில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான அவியல் என்கிற அந்தாலஜி படத்தில், லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'களம்' என்கிற குறும்படம் இடம்பெற்றது. இந்த குறும்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால், திரைப்படம் இயக்கும் வாய்ப்பை கைப்பற்றினார்.
 
2017 ஆம் ஆண்டு 'மாநகரம்' படத்தின் மூலம் வெள்ளி திரையில் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ், முதல் படத்திலேயே ரசிகர்கள் கவனத்தை ஈர்த்த நிலையில், இந்த படத்தை தொடர்ந்து இவர் இயக்கிய கைதி, மாஸ்டர், விக்ரம், போன்ற படங்கள் அடித்தடுத்து சூப்பர் ஹிட் லிஸ்டில் இணைந்தது.

இறுதியாக இவர் இயக்கத்தில் தளபதி விஜய் மாஸ்டர் படத்தை தொடர்ந்து நடித்த 'லியோ' திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இப்படம் வெளியான ஐந்து நாட்களிலேயே, சுமார் 400 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ள நிலையில், இந்தியாவில் மட்டும் 200 கோடி வசூலை கடந்துள்ளது. எப்படியும் ஒரே வாரத்தில் 500 கோடியை இப்படம் தாண்டும் என்பதை உறுதி செய்து ரசிகர்கள் இந்த தகவலை கொண்டாடி வருகிறார்கள்.
 
தமிழில் மட்டும் இன்றி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் தளபதியின் மலையாள ரசிகர்கள் லியோ படத்தை சிறப்பிக்கும் விதமாக நிகழ்ச்சி ஒன்றை, பாலக்காட்டில் உள்ள அரோமா திரையரங்கில் ஏற்பாடு செய்திருந்த நிலையில், இதில் லோகேஷ் கனகராஜும் கலந்து கொண்டார்.

ஞாயிற்று கிழமை இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட லோகிக்கு எதிர்பாராத விதமாக காலில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் இதன் காரணமாக அவர், உடனடியாக அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி திரையுலகினர் மற்றும் தளபதி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியின் போது லோகேஷ் கனகராஜ் எடுத்து கொண்ட செல்ஃபி புகைப்படமும் வைரலாக பார்க்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்