இஸ்ரேல் - ஹமாஸ் மோதல்- விடுத்துள்ள ஒபாமா எச்சரிக்கை!
24 ஐப்பசி 2023 செவ்வாய் 10:36 | பார்வைகள் : 4103
காசா மீதான இஸ்ரேலின் முற்றுகையால் எதிர்விளைவுகள் ஏற்படக்கூடும் என அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் காசாவை முற்றுகையிட்டுள்ளது.
விமானக்குண்டுவீச்சுகளும் எதிர்விளைவுகளை ஏற்படுத்தலாம் என பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
இது இறுதியில் மத்தியகிழக்கில் அமைதி ஸ்திரதன்மையை ஏற்படுத்துவதற்கான நீண்டகால முயற்சிகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது.
நாங்கள் இஸ்ரேலிற்கு ஆதரவளித்தால் கூட இஸ்ரேல் ஹமாசிற்கு எதிரான யுத்தத்தை எவ்வாறு முன்னெடுக்கின்றது என்பது குறித்து நாங்கள் தெளிவாகயிருக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை தனது மக்களை இவ்வாறான வன்முறைகளில் இருந்து பாதுகாப்பதற்கான இஸ்ரேலின் உரிமையை அவர் நியாயப்படுத்தியுள்ளார்.
எனினும் மத்தியகிழக்கில் இடம்பெறும் விடயங்களை உலகம் உன்னிப்பாக அவதானிக்கின்றது மனித உயிரிழப்புகளை அலட்சியப்படுத்தும் இஸ்ரேலின் இராணுவ தந்திரோபாயங்கள் எவையும் இறுதியில் எதிர்விளைவுகளை ஏற்படுத்தலாம் என அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
கடந்த 7 ஆம் திகதி ஹாமாஸ் குழுவினர் திடீர் தாக்குதலை மேற்கொண்ட நிலையில், இஸ்ரேல் - ஹமாஸ் போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை.