விண்வெளியில் விவசாயத்தை மேற்கொண்ட சீனா
24 ஐப்பசி 2023 செவ்வாய் 10:42 | பார்வைகள் : 2463
சீனாவின் ஷென்சோ-16 விண்வெளி திட்டத்தின் மூலம் விண்வெளியில் கீரை, சின்ன வெங்காயம் மற்றும் செர்சி தக்காளியை விளைவித்து அறுவடை செய்துள்ளதாக சீனா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள்.
ஒவ்வொரு நாடு தங்களது விண்வெளி பயணத்தில் தங்களது முன்னுரிமையை நிலைநாட்டிக் கொண்டே இருகின்றது. அந்தவகையில் சீனாவும் தளர்ந்தது இல்லை.
விண்வெளியிலேயே விவசாயம் செய்து, அறுவடையும் செய்துள்ளது. இந்த செயலானது உலக மக்களின் கவனத்தையே ஈர்த்துள்ளது.
சீனா தனக்கென்று தனியாக விண்வெளியில் டியாங்காங் விண்வெளி மையத்தை அமைத்துள்ளது. இதற்கு ஷென்சோ-16 விண்கலத்தின் மூலம் 3 பேர் விண்ணிற்கு சென்றனர்.
சென்ற 3 பேரும் விண்வெளி மையத்திலேயே கீரை, சின்ன வெங்காயம், செர்ரி தக்காளி செடிகளை வளர்க்க தொடங்கியுள்ளார்கள்.
பொதுவாகவே பூமியில் சூரிய வெளிச்சம் மற்றும் தண்ணீர் என ஒரு செடி வளர்வதற்கான அடிப்படை காரணிகள் காணப்படுகின்றது. ஆனால் விண்வெளியில் இந்த வசதி ஏதும் கிடையாது.
இந்த நிலையிலும் சிறப்பு ஏற்பாடுகளை சீனா செய்து, அதாவது தாவர வளர்ச்சிக்கு தேவையான வெப்பநிலை, ஈரப்பதம், ஆக்சிஜன், கார்பன் டை-ஆக்சைடு உள்ளிட்டவை சரியான அளவில் கிடைக்கும் வகையில் உருவாக்கி, அதில் பயிர்செய்கை ஆரம்பித்துள்ளனர்.
இது வெற்றிகரமாக முடிந்ததால் இந்த குழுவினர் விண்வெளியில் ஆய்வை முடித்துவிட்டு அடுத்த மாதம் பூமிக்கு வர உள்ளனர்.
விண்வெளியில் காய்கறி செடிகளை வளர்த்து அறுவடை செய்யும் முயற்சியில் அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய விண்வெளி வீரர்கள் சாதனை படைத்து இருந்ததனர்.
மேலும் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் வேளையில் அவர்களுக்கு தேவையான உணவை பூமியில் இருந்து தயார் செய்து அனுப்புகிறார்கள். ஆனால் அதற்க பதிலாக அங்கேயே பயிர்செய்கை செய்து அதை சாப்பிட்டால் சிறப்பாக இருக்கும் என்ற நோக்கத்தில் பல உலக நாடுகள் இந்த திட்டத்தை முன்னெடுத்து வருகின்றது என்பது குறிப்பித்தக்கது.