Paristamil Navigation Paristamil advert login

இஸ்ரேலில் மக்ரோன் - ஈவிரக்கமற்ற தாக்குதலுகு அழைப்பு!

இஸ்ரேலில் மக்ரோன் - ஈவிரக்கமற்ற தாக்குதலுகு அழைப்பு!

24 ஐப்பசி 2023 செவ்வாய் 12:56 | பார்வைகள் : 8826


ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இன்று செவ்வாய்க்கிழமை காலை இஸ்ரேலைச் சென்றடைந்தார். இஸ்ரேல்-ஹமாஸ் தாக்குதல் ஆரம்பித்து இரு வாரங்களின் பின்னர் மக்ரோன் அங்கு பணித்துள்ளார்.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதான்யஹுவினைச் சந்தித்து உரையாடினார். ஹமாஸ் அமைப்பினர் மீதான தாக்குதல் இரக்கமற்றதாக இருக்கவேண்டும் என ஜனாதிபதி மக்ரோன் இஸ்ரேலிய பிரதமரிடம் தெரிவித்தார். 

"ஹமாஸுக்கு எதிரான போராட்டம் இரக்கமற்றதாக இருக்க வேண்டும், ஆனால் விதிகள் மீறப்படாமல் இருக்கவேண்டும்" என ஜனாதிபதி மக்ரோன் குறிப்பிட்டார்.

ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலில் அங்கு 30 பிரெஞ்சு மக்கள் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்