இஸ்ரேலில் இருந்து ஜோர்தானுக்கு பயணமாகும் மக்ரோன்!

24 ஐப்பசி 2023 செவ்வாய் 14:45 | பார்வைகள் : 7091
தற்போது இஸ்ரேலில் உள்ள ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அங்கிருந்து ஜோர்தானுக்கு பயணிக்க உள்ளார்.
நாளை புதன்கிழமை காலை மக்ரோன் தனது விமானத்தில் ஜோர்தான் தலைநகர் அம்மானுக்குச் செல்லவுள்ளார். அங்கு ஜோர்தானிய ஜனாதிபதி Abdullah II இனைச் சந்திக்க உள்ளார். மற்றும் ஏனைய அரசியல் தலைவர்களையும் சந்திக்க உள்ளார்.
ஜோர்தான் நாடானது இஸ்ரேனின் நிரலப்பரப்புடன் மிக நீண்ட எல்லையைக் கொண்ட நாடாகும்.
இஸ்ரேலில் தற்போது ஹமாஸ் அமைப்புடன் யுத்தம் இடம்பெற்றுக்கொண்டு வரும் நிலையில், இதுவரை அங்கு 5,791
பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 30 பிரெஞ்சு மக்களும் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் ஏழு பேர் தொடர்பில் தகவல்கள் எதுவும் இல்லை. இந்நிலையிலேயே ஜனாதிபதி மக்ரோன் இன்று இஸ்ரேலுக்கு பயணமாகியிருந்தார்.