Paristamil Navigation Paristamil advert login

MUSÉE GRÉVIN காட்சியகத்தில் RAiD அதிரடிப்படையினரின் மெழுகு சிலை!

MUSÉE GRÉVIN காட்சியகத்தில் RAiD அதிரடிப்படையினரின் மெழுகு சிலை!

24 ஐப்பசி 2023 செவ்வாய் 16:02 | பார்வைகள் : 4989


மெழுகு சிலைகளை காட்சிப்படுத்தும் MUSÉE GRÉVIN அருங்காட்சியகத்தில் புதிதாக RAiD அதிரடிப்படை வீரர் ஒருவரது மெழுகு சிலை அமைக்கப்பட்டுள்ளது. 

பரிசில் உள்ள குறித்த மெழுகுசிலைக் காட்சியகத்தில் உலகம் முழுவதிலும் இருந்து பல நூறு பிரபலங்களையும், கற்பனைக் கதாப்பாத்திரங்களையும் மெழுகு சிலைகளாக வடித்து காட்சிக்கு வைத்திருந்த நிலையில், தற்போது அங்கு முதன்முறையாக பிரெஞ்சு அதிரடிப்படை வீரர் ஒருவரது சிலை வைக்கப்பட்டுள்ளது. 'எங்களது உண்மையான ஹீரோக்களை நாங்கள் எப்படி தவற விடுவோம்? அவர்களையும் கெளரவப்படுத்த இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது!' என காட்சியகத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இந்த சிலைக்காக கடந்த ஏழு ஆண்டுகளாக RAiD படையில் பணிபுரியும் Aurélien (வயது :38) எனும் ஒருவரது வடிவத்தையே சிலையாக வடித்துள்ளனர். 

குறித்த வீரர் ஸ்னைப்பர் துப்பாக்கிச்சூட்டில் புகழ்பெற்றவர். பிரான்சின் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களின் போது துடிப்புடன் செயற்பட்ட வீரர் என்பதால் அவரது உருவம் சிலை வடிக்க தேர்தெடுக்கப்பட்டது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்