Paristamil Navigation Paristamil advert login

இன்ஸ்டாகிராம் பயனர்களின் தரவுகளை பாதுகாக்க கூடுதல் அம்சங்கள் அறிமுகம்

இன்ஸ்டாகிராம் பயனர்களின் தரவுகளை பாதுகாக்க கூடுதல் அம்சங்கள் அறிமுகம்

25 ஐப்பசி 2023 புதன் 08:59 | பார்வைகள் : 2583


இன்ஸ்டாகிராமில் பயனர்களின் பாதுகாப்பிற்காக புதிய அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 

சமூக வலைதள ஊடகமான இன்ஸ்டாகிராமில் பயனர்களின் தரவுகள், வரைமுறையற்று பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.

இதன் காரணமாக பெரும்பாலான நிறுவனங்கள் பல மில்லியன் கணக்கில் அபராதம் செலுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டன.

இந்த நிலையில் பயனர்கள் தங்கள் தரவுகளை தாங்களே கையாளும் படியான சில திருத்தங்களை, நிறுவனங்கள் Settings பக்கத்தில் கொண்டு வந்துள்ளன. 

இதன்மூலம் பயனர்கள் தங்களது Search interest, தளத்தில் மேற்கொண்ட செயல்பாடுகள் ஆகியவற்றை சேமித்து வைத்துக் கொள்ளலாம்.  

முதலில் இதனை கூகுள் தங்களது Settings பக்கத்தில் அறிமுகம் செய்தது. அதனைத் தொடர்ந்து இதே அம்சம் பேஸ்புக்கில் கொண்டுவரப்பட்டது.

இந்த நிலையில் தான் மெட்டாவின் கீழ் இயங்கும் இன்ஸ்டாகிராம் தளம் அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலமாக பயனர்கள் தங்களது தரவுகளை மெட்டா எப்படி பயன்படுத்தலாம் என்பதை நிர்வகிக்க முடியும். 

மேலும், மெட்டாவின் கீழ் இயங்கும் ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் வெவ்வேறு Settingகளை வைத்திருக்க விரும்பும் பயனர்களுக்கு, Account Centre சிறப்பாக செயல்படும் வகையில் அவர்களின் Settingsஐ நிர்வகிக்க நெகிழ்வுத்தன்மையை நிறுவனம் வழங்குகிறது.      

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்