Gare de Lyon தொடருந்து நிலையத்துக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுத்த ஒருவர் கைது!
25 ஐப்பசி 2023 புதன் 10:51 | பார்வைகள் : 4620
பரிசில் உள்ள மிகவும் நெருக்கடியான தொடருந்து நிலையமான Gare de Lyon இற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுத்த ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான நபர் ஒக்டோபர் 19 ஆம் திகதியன்று குறித்த நிலையத்துக்கு மின்னஞ்சல் ஊடாக வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுத்திருந்தார். அதையடுத்து தொடருந்து நிலையத்தில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டு, சேவைகள் நிறுத்தப்பட்டது. வெடிகுண்டு அகற்றும் படையினர் தேடுதல் வேட்டை மேற்கொண்டிருந்தனர். பின்னர் அது ஒரு போலி அச்சுறுத்தல் என தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்தே, அச்சுறுத்தல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டிருந்தார். அவருக்கு 1500 யூரோக்கள் குற்றப்பணமும், தொடருந்து சேவைகள் தடை செய்திருந்தமைக்கான இழப்பீடாக 150,000 யூரோக்கள் நஷ்ட்ட ஈடும் வழங்கப்படவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்சில் போலி வெடிகுண்டு அச்சுறுத்தல் காரணமாக தற்போது 64 வழக்குகள் விசாரணைகளில் உள்ளன.