அல்லா அக்பர் என கோஷமிட்டுக்கொண்டு சிறையதிகாரியை தாக்கிய கைதி!!
25 ஐப்பசி 2023 புதன் 11:04 | பார்வைகள் : 11323
அல்லா அக்பர் (இறைவனே பெரியவர்) என கோஷமிட்டுக்கொண்டே கைதி ஒருவர் சிறைச்சாலை உயரதிகாரியை தாக்கியுள்ளார்.
Aisne நகரில் உள்ள Château-Thierry சிறைச்சாலையில் இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. மொராக்கோவைச் சேர்ந்த ஒருவன் கொள்ளையில் ஈடுபட்ட குற்றத்துக்காக அங்கு சிறைவைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று காலை திடீரென உயரதிகாரியை கத்தியினால் தாக்கியுள்ளார்.
அதன்போது 'அல்லா அக்பர்' என கோஷமிட்டார். சிறையதிகாரி சிறிய காயங்களுக்கு உள்ளானார்.
இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.


























Bons Plans
Annuaire
Scan