அமெரிக்க நடிகரின் சிலையால் பரபரப்பு! - Grévin museum விளக்கம்!!

25 ஐப்பசி 2023 புதன் 13:00 | பார்வைகள் : 7964
The Rock என அறியப்படும் அமெரிக்காவின் பிரபல நடிகர் Dwayne Johnson இன் மெழுகு சிலை அண்மையில் பரிசில் உள்ள மெழுகு சிலை காட்சியகத்தில் வைக்கப்பட்டது. உடனடியாக இந்த சிலை விவகாரம் சர்ச்சைக்குரியதாகவும் மாறியுள்ளது.
குறித்த நடிகரின் சில அதிக வெளிர் நிறமாக இருப்பதாகவும், நடிகரின் உண்மையான தோல் நிறத்தை விட அதிக வெண்மையான நிறத்தில் உருவம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அதனை பார்வையிட்டவர்கள் விமர்ச்சித்து வருகின்றனர்.
உண்மையான நிறத்தை விடவும் அதிக வெண்மையுடன் உருவாக்கப்பட்டுள்ளமை பெரும் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், குறித்த காட்சியகம் சிலையை அகற்றி அதனை உருவாக்கிய தளத்துக்கு அனுப்பி வைக்க திட்டமிட்டுள்ளது.
வேலைத்தளத்துக்கு அனுப்பப்பட்ட புகைப்படத்தின் மூலம் உண்மையான தோல் நிறத்தை பிரதிபலிக்க முடியவில்லை என காட்சியகம் விளக்கமளித்துள்ளது.
இது தொடர்பாக நடிகர் Dwayne Johnson தெரிவிக்கையில், இது தொடர்பாக நான் குறித்த காட்சியகத்தை தொடர்புகொள்ள முயற்சிக்கிறேன் என தெரிவித்தார்.