வெளிநாடுகளைச் சேந்த 17 குற்றவாளிகள் இன்று பிரான்சில் இருந்து வெளியேற்றம்!!

25 ஐப்பசி 2023 புதன் 14:45 | பார்வைகள் : 17539
பிரான்சில் குற்றச்செயலில் ஈடுபட்ட 17 வெளிநாட்டவர்கள் அவர்களது நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
‘கொள்ளைகளில் ஈடுபட்டவர்கள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள், ஆயுதங்களை பயன்படுத்தி அச்சுறுத்தலில் ஈடுபட்டவர்கள் என மொத்தம் 17 பேர் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்!” என
உள்துறை அமைச்சர்mGérald Darmanin, ஒக்டோபர் 25, இன்று புதன்கிழமை தெரிவித்தார்.
அண்மையில் Arras நகரில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து நாடு முழுவதும் பல்வேறு குற்றச்செயல்கள், அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளன. இதுபோன்ற செயல்களில் ஈடுபட்ட பலர் கண்காணிப்பில் உள்ளதாகவும், அவர்களில் உள்ள வெளிநாட்டவர்களும் வெளியேற்றப்பட உள்ளதாக அறிய முடிகிறது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025