Paristamil Navigation Paristamil advert login

ஹசாவுக்குச் செல்லும் பிரெஞ்சு இராணுவக் கப்பல்!

ஹசாவுக்குச் செல்லும் பிரெஞ்சு இராணுவக் கப்பல்!

25 ஐப்பசி 2023 புதன் 17:00 | பார்வைகள் : 11889


பிரெஞ்சு இராணுவ கப்பல் ஒன்று ஹாசா பகுதிக்கு சென்றடையும் என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அறிவித்துள்ளார்.

மருத்துவ உதவிப்பொருட்களை ஏற்றிக்கொண்டு பிரெஞ்சு இராணுவ கப்பல் ஒன்று அடுத்த 48 மணிநேரத்தில் ஹாசாவினைச் சென்றடையும் என மக்ரோன் அறிவித்துள்ளார். அதேவேளை, ஹாசாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவி வழங்குவதற்காக பிரெஞ்சு விமானம் ஒன்று நாளை அங்கு சென்றடையும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

எகிப்த் தலைநகர் Cairo இல் வைத்து ஜனாதிபதி மக்ரோன் இதனை அறிவித்தார். மத்திய கிழக்கு நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ஜனாதிபதி மக்ரோன், இன்று காலை எகிப்த்துக்கு சென்றடைந்தமை குறிப்பிடத்தக்கது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்