Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் : முதியவர் வீட்டில் கொள்ளையிட்ட - சிறுவர்கள் உள்ளிட்ட ஐவர் கைது!

பரிஸ் : முதியவர் வீட்டில் கொள்ளையிட்ட - சிறுவர்கள் உள்ளிட்ட ஐவர் கைது!

25 ஐப்பசி 2023 புதன் 16:41 | பார்வைகள் : 13622


பரிசில் வசிக்கும் முதியவர் ஒருவரது வீட்டில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தை அடுத்து, சிறுவர்கள் உள்ளிட்ட ஐவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பரிஸ் 16 ஆம் வட்டாரத்தில் வசிக்கும் 81 வயதுடைய பெண் ஒருவரது வீட்டிலேயே ,ள்கொள்ளையிடப்பட்டுள்ளது. rue Louis-David வீதியில் உள்ள குறித்த வீட்டுக்குள் திங்கட்கிழமை பிற்பகல் 3 மணி அளவில் நுழைந்த கொள்ளையர்கள் சிலர், அங்கு தனியாக வசித்த குறித்த மூதாட்டியை கட்டி வைத்துவிட்டு கொள்ளையில் ஈடுபட்டனர்.

பின்னர் காவல்துறையினர் சம்பவ இடத்தினை வந்தடையும் முன்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

காவல்துறையினர் ஐவர் கொண்ட குழுவை குறித்த அடுக்குமாடி குடியிருப்பு அருகே கைது செய்தனர். 18, 19, 22 வயதுடைய மூவரையும் 16 வயதுடைய ஒரு சிறுமி ஒருவரையும்  15 வயதுடைய சிறுவன் ஒருவரையும் கைது செய்தனர்.

அவர்களிடன் சிறிய கைத்துப்பாக்கி ஒன்று இருந்ததாகவும், பாதிக்கப்பட்ட மூதாட்டி தலையில் காயமடைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

சதீஸ்குமார் அபிசன்

வயது : 21

இறப்பு : 07 Dec 2025

  • Ecology

    2

வர்த்தக‌ விளம்பரங்கள்