Paristamil Navigation Paristamil advert login

‛அன்னபூரணி' ஆக மாறிய நயன்தாரா

‛அன்னபூரணி' ஆக மாறிய நயன்தாரா

25 ஐப்பசி 2023 புதன் 16:48 | பார்வைகள் : 8845


நடிகை நயன்தாராவின் 75வது படத்தை ஜீ ஸ்டூடியோஸ், டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர். இந்த படத்தை ஷங்கரின் உதவி இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்குகிறார். ராஜா ராணி படத்திற்கு பிறகு இந்தப் படத்தில் நடிகை நயன்தாரா உடன் நடிகர்கள் ஜெய் மற்றும் சத்யராஜ் இணைந்து நடிக்கின்றனர். கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, கார்த்திக் குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

இந்த படத்திற்கு 'அன்னபூரணி' என தலைப்பு வைத்துள்ளதாக வீடியோவின் மூலம் அறிவித்துள்ளனர். இதில் நயன்தாரா உணவுப் பிரியையாக நடித்திருக்கிறார் என தெரிகிறது. மேலும் படத்தின் டேக் லைனா ‛அன்னப்பூரணி - சாப்பாட்டு பிரியை' என குறிப்பிட்டுள்ளனர். இதனால் இப்படம் உணவு மற்றும் சமையலை மையமாக கொண்ட கதையில் உருவாகலாம் என தெரிகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்