Paristamil Navigation Paristamil advert login

ஹமாஸ் தாக்குதலில் கொல்லப்பட்ட பிரெஞ்சு மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஹமாஸ் தாக்குதலில் கொல்லப்பட்ட பிரெஞ்சு மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

25 ஐப்பசி 2023 புதன் 17:03 | பார்வைகள் : 14504


ஹமாஸ் தாக்குதலில் கொல்லப்பட்ட பிரெஞ்சு மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அறிவித்துள்ளார்.

மத்திய கிழக்கின் பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோம், சற்று முன்னர் எகிப்த்தில் வைத்து இதனை அறிவித்தார். இஸ்ரேலில் ஹாமாஸ் அமைப்பினரின் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளதாகவும் (முன்னதாக வெளியான தகவல்களின் படி 30 பேர் கொல்லப்பட்டிருந்தனர்) ஒன்பது பேர் காணாமல் போயுள்ளதாகவும் ஜனாதிபதி மக்ரோன் அறிவித்தார்.

அதேவேளை, “அனைத்து உயிர்களும் சமமானது. பாதிக்கப்பட்டவர்கள் அனைவரையும் ஒரே போன்று பார்க்கவேண்டும்.  மத்திய கிழக்கில் அமைதி மீண்டும் வருவதை நான் விரும்புகிறேன்!” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்