Paristamil Navigation Paristamil advert login

சீனாவில் தொழிற்சாலை பாரிய வெடிப்பு - 6 பேர் பலி

சீனாவில் தொழிற்சாலை பாரிய வெடிப்பு - 6 பேர் பலி

23 ஐப்பசி 2023 திங்கள் 02:35 | பார்வைகள் : 7479


சீனாவில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.

அதில் 6 பேர் உயிரிழந்தாக தகவல் வெளியாகியுள்ளது.

தெற்கு சீனாவின் குவாங்சி ஜுவாங் பிராந்தியம் பிங்குவோ நகரில் அலுமினிய தொழிற்சாலை ஒன்று செயல்படுகிறது.

இங்கு வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலை பார்த்து கொண்டிருந்தனர். அலுமினிய கம்பிகளை வெளியேற்றும் சமயத்தில் உயர் வெப்பநிலை காரணமாக பாய்லர் வெடித்து சிதறியது.

இதனால் அங்கிருந்தவர்கள் பயத்தில் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடினர்.

இருப்பினும் இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

மேலும் 4 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. மீட்புபடையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்