கமலுக்கு ஜோடியாகும் நயன்தாரா...?
23 ஐப்பசி 2023 திங்கள் 13:09 | பார்வைகள் : 7703
நடிகர் கமல்ஹாசன் தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 'இந்தியன் 2' படத்தில் நடித்து வருகிறார். விரைவில் வினோத் இயக்கத்தில் கமல் தனது 233வது படத்தில் நடிக்கவுள்ளார். இதையடுத்து மணிரத்னம் இயக்கத்தில் தனது 234வது படத்தில் நடிக்கவுள்ளார் கமல்.
ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இதில் நடிக்க நடிகர்கள் ஜெயம் ரவி, துல்கர் சல்மான் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில் இப்போது இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிக்க நடிகை நயன்தாரா ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக நயன்தாராவிற்கு பெரும் தொகை சம்பளமாக பேசப்பட்டது என சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.
ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு, கார்த்தி, ஆர்யா, விஷால், ஜெயம் ரவி.... என தமிழ் சினிமாவில் அனேக முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார் நயன்தாரா. ஆனால் இதுவரை கமல் உடன் மட்டும் நடிக்கவில்லை. அந்த குறை இப்போது நீங்க போகிறது. முதன்முறையாக கமலின் படத்தில் நடிக்க போகிறார். ஏற்கனவே த்ரிஷா, வித்யாபாலன் ஆகியோரிடம் கதாநாயகியாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan