Paristamil Navigation Paristamil advert login

நீச்சல் குளத்தில் ஏற்பட்ட தொற்று - பிரித்தானிய பெண்ணுக்கு நேர்ந்த கதி

நீச்சல் குளத்தில் ஏற்பட்ட தொற்று - பிரித்தானிய பெண்ணுக்கு நேர்ந்த கதி

24 ஐப்பசி 2023 செவ்வாய் 09:46 | பார்வைகள் : 3463


இங்கிலாந்திலுள்ள Crayford என்ற இடத்தைச் சேர்ந்த ஷெரீன் (Shereen-Fay Griffin, 38) என்னும் இளம்பெண், நீச்சல் குளம் ஒன்றில் குளிக்கச் சென்றபோது, அவரது கண்ணில் நோய்த்தொற்று உருவாகியுள்ளது.

மருத்துவமனைக்குச் சென்ற ஷெரீனை பரிசோதித்த மருத்துவர்கள், சில மருந்துகளைக் கொடுத்துவிட்டு, மீண்டும் அழைப்பதாகக் கூறியுள்ளார்கள்.

ஆனால், 10 வாரங்களாக மருத்துவமனையிலிருந்து ஷெரீனுக்கு அழைப்பு வரவேயில்லை. 

ஒருநாள் காலை கண் விழித்த அவர் தனது ஒரு கண்ணில் பார்வை இல்லை என்பதை உணர்ந்திருக்கிறார்.

உடனடியாக ஷெரீன் மருத்துவமனைக்குச் செல்ல, அப்போதுதான் ஒரு மருத்துவர் ஷெரீனுக்கு Acanthamoeba keratitis என்னும் கிருமித் தொற்று ஏற்பட்டுள்ளதைக் கண்டுபிடித்துள்ளார்.

ஆனால், பாவம், அவரது கண்டுபிடிப்பால் ஷெரீனுக்கு எந்த பயனும் இல்லை. 

வேறொரு பெரிய மருத்துவமனைக்கு ஷெரீன் செல்ல, முந்தின மருத்துவமனையில் கொடுக்கப்பட்ட தவறான சிகிச்சை அவரது நிலைமையை மோசமாக்கிவிட்டதாக அங்குள்ள மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


நீச்சல் குளத்தில் ஏற்பட்ட தொற்று, மற்றும் அரசு மருத்துவமனையின் கவனக்குறைவால் மீதமுள்ள வாழ்நாளை ஒரு கண்ணில் பார்வையில்லாமலேயே செலவிடும் நிலைக்கு ஆளாகியுள்ளார் ஷெரீன்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்