Paristamil Navigation Paristamil advert login

பிரித்தானியாவில் இரண்டு மூக்குகளுடன் அரிய வகை பூனை கண்டுபிடிப்பு!

பிரித்தானியாவில் இரண்டு மூக்குகளுடன் அரிய வகை பூனை கண்டுபிடிப்பு!

24 ஐப்பசி 2023 செவ்வாய் 09:47 | பார்வைகள் : 1663


பிரித்தானிய நாட்டில் இரு மூக்குகளுடன் அரியவகை பூனை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியா - வாரிங்டன் தத்தெடுப்பு நிலைய ஊழியர்கள் முதலில் பூனைக்கு பெரிய மூக்கு உள்ளதென நினைத்தனர்.

இருப்பினும், சோதனையின்போது அந்த 4 வயதுப் பூனைக்கு 2 மூக்குகள் உள்ளன என்று தெரியவந்துள்ளது, இதேவேளை குறித்த புனைக்கு பிறக்கும்போதே 2 மூக்குகள் இருந்திருக்கக்கூடும் என்று விலங்குநல மருத்துவர் ஒருவர் கூறினார்.

2 மூக்குகள் கொண்ட பூனை மிகவும் அரியது என்று சொன்ன அவர், அதனால் பூனைக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றார்.

அதற்கு நேன்னி மெக்பீ (Nanny McPhee) என்று பெயரிடப்பட்டுள்ளது.

நேன்னி மெக்பீ என்பது சிறுவர்களுக்கான புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் மாறுபட்ட மூக்கு வடிவம் கொண்ட ஒரு கதாபாத்திரம். அந்தப் பூனையைத் தத்தெடுக்கப் பலர் முன்வருவர் என்று நிலைய ஊழியர்கள் எதிர்பார்க்கப்படுகின்றது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்