இலங்கை ரூபாய் பெறுமதியில் ஏற்பட்ட வீழ்ச்சி
27 ஐப்பசி 2023 வெள்ளி 09:57 | பார்வைகள் : 9936
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்று சிறிதளவு வீழ்ச்சி கண்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களின்படி,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதி முறையே 321.54 ரூபாவாகவும், 332.01 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
நேற்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதி முறையே 321.39 ரூபாவாகவும், 331.93 ரூபாவாகவும் காணப்பட்டது.
மத்திய கிழக்கு உட்பட ஏனைய நாட்டு நாணயங்களுக்கு நிகராகவும் இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று சரிந்துள்ளது.



























Bons Plans
Annuaire
Scan