லூவர் பிரமிட் கோபுரத்தின் மீது ஏறிய சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்!
27 ஐப்பசி 2023 வெள்ளி 15:24 | பார்வைகள் : 6258
லூவர் அருங்காட்சியகத்தில் உள்ள பிரமிட் கண்ணாடிக் கோபுரத்தின் மீது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஏற முற்பட்டுள்ளனர்.
இன்று ஒக்டோபர் 27, வெள்ளிக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பிரமிட் கோபுரத்தின் மீது செம்மஞ்சள் நிற வண்ணப்பூச்சினை அடிப்பதற்காக அவர்கள் அதில் ஏற முற்பட்டுள்ளனர். உடனடியாக அங்கிருந்த பாதுகாவலர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.
“collectif Dernière rénovation” என அறியப்படும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களே மேற்படி செயலில் ஈடுபட்டனர். அவர்கள் தெரிவித்ததன் படி, லூவரில் உள்ள பிரமிட் கோபுரம் புவி வெப்பமடைவதற்கு ஏதுவாக உள்ளது. அதன் ஒளிப்பினை குறைப்பதற்கான வண்ணம் பூசுகிறோம்! என தெரிவித்தனர்.
இதே அமைப்பைச் சேர்ந்த சிலர் அண்மையில் பரிசில் உள்ள louis vuitton காட்சியறைக்கு முன்பாக இதே வண்ணப்பூச்சினை அடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.