Paristamil Navigation Paristamil advert login

சிரியா மீது தாக்குதலை மேற்கொண்ட அமெரிக்கா 

சிரியா மீது தாக்குதலை மேற்கொண்ட அமெரிக்கா 

27 ஐப்பசி 2023 வெள்ளி 15:50 | பார்வைகள் : 5414


மத்திய கிழக்கு கடற்பகுதி, ஈராக் மற்றும் சிரியாவில் அமெரிக்கா தனது துருப்புகளை நிறுத்தியுள்ளது. 

ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதமேந்திய படைக்குழு அமெரிக்க துருப்புகள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றது.

கடந்த 17 ஆம் திகதி அமெரிக்க துருப்புகள் மீது தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலின்போது அமெரிக்க இராணுவத்தைச் சேர்ந்த 21 பேர் காயமடைந்தனர். 

அவர்கள் குணமடைந்து தற்போது பணிக்கு திரும்பியுள்ளனர்.

இதற்கு பதிலடியாக அமெரிக்கா, கிழக்கு சிரியாவில் உள்ள இரண்டு இடங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. 

இந்த துல்லியமான தாக்குதல், கடந்த 17 ஆம் திகதி பதிலடி என அமெரிக்கா தெரிவித்துள்ளது. 

ஹமாஸ்- இஸ்ரேல் இடையிலான போருக்கும் இந்த தாக்குதலுக்கும் தொடர்பு இல்லை எனவும் தெரிவித்துள்ளது.

'தற்பாதுகாப்புக்காக குறுகியதாக வடிவமைக்கப்பட்ட இந்த தாக்குதல்கள், ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள அமெரிக்க துருப்புகளை பாதுகாப்பது மட்டுமே நோக்கமாக இருந்தன' என அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு சபையின் ஊடகப் பேச்சாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார்.

சிரியாவில் அமெரிக்க துருப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு அமெரிக்க ஜனாதிபதி நேற்று எச்சரிக்கை விடுத்ததால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்