உறக்கமின்றி தவிக்கும் கனேடியர்கள் ஆய்வு தகவல்....!

28 ஐப்பசி 2023 சனி 09:04 | பார்வைகள் : 6717
கனடாவில் மக்கள் உறக்கமின்றி வாழ்வதாக புள்ளி விபரம் வெளியாகியுள்ளது.
இளம் கனேடியர்கள் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக அதிருப்தி அடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
பொருளாதார மற்றும் நிதிப் பிரச்சினைகள் காரணமாக உறக்கம் இன்றி தவிப்பதாக கருத்துக் கணிப்பில் பங்குபற்றியவர்கள் தெரிவித்துள்ளனர்.
கனடாவின் ஆர் பி சி வாங்கினால் அண்மையில் முன்னெடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றின் மூலம் இந்த விடயம் தெரிய வந்துள்ளது.
40 வீதமான வயது வந்த கனடியர்கள் நிதி பிரச்சனைகள் காரணமாக உறக்கம் இன்றி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
கனடாவில் முன்னொரு போதும் இல்லாத அளவிற்கு தற்போது உணவு வங்கிகளின் பயன்பாடு வெகுவாக உயர்வடைந்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.