பிரான்சில் 1916 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருக்கும் குளிர்கால நேர மாற்றம்.
28 ஐப்பசி 2023 சனி 09:52 | பார்வைகள் : 10200
ஐரோப்பிய நாடுகளில் குளிர்காலத்தில் அக்டோபர் மாதத்தின் கடைசி சனி ஞாயிறு இரவில் நேரமாற்றம் இடம்பெற்று வருகிறது. அதன்படி இன்று இரவு அல்லது ஞாயிறு அதிகாலை நேரம் மாற்றம் இடம் பெற உள்ளது.
இந்த நடைமுறை 1916 ஆம் ஆண்டு முதல் பிரான்ஸ் தேசத்தில் கடைப்பிடிக்க தொடங்கப்பட்டது. பின்னர் 1944ம் ஆண்டு இந்த நடைமுறை கைவிடப்பட்டது, மீண்டும் 1975 ஆம் ஆண்டு முதல் இந்த நடைமுறை பிரான்சில் கடைப்பிடிக்கப்படுகிறது.
அதன்படி இன்று 28/10 நல்லிரவைத் தாண்டி நாளை. 29/10 அதிகாலை மூன்று மணி, அதிகாலை இரண்டு மணியாக மாறவுள்ளது, இதனால் இன்று இரவு தூக்கம் ஒருமணி நேரம் அதிகமாக எடுத்துக் கொள்ள முடிகிறது.


























Bons Plans
Annuaire
Scan