Paristamil Navigation Paristamil advert login

பற்களுக்கான மருத்துவ செலவை மட்டுப் படுத்துகிறது l’Assurance maladie.

பற்களுக்கான மருத்துவ செலவை மட்டுப் படுத்துகிறது l’Assurance maladie.

28 ஐப்பசி 2023 சனி 09:59 | பார்வைகள் : 4863


அரச மருத்துவ காப்புறுதி நிறுவனமான 'l’Assurance maladie' மக்களின் மருத்துவ செலவின் 70% சதவீதத்தை தாமே செலுத்துவது இதுவரை வழமையான ஒன்றாக இருந்து வருகிறது.

இவ்வாண்டு ஒக்டோபர் 15ம் திகதி முதல் பற்களுக்கான மருத்துவ காப்புறுதி செலவை l’Assurance maladie 70% சதவீதத்தில் இருந்து 60% சதவீதமாக குறைத்துள்ளது. இதனால் மீதம் உள்ள 40% சதவீத மருத்துவ செலவை நோயாளர்களே ஏற்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தனியார் மருத்துவ காப்புறுதி குறித்த 40% சதவீத கொடுப்பனவை செலுத்தாத பட்சத்தில் நோயாளர்களே தங்களின் பையில் இருந்து செலுத்தவேண்டும்.

l’Assurance maladie 10% சதவீத கொடுப்பனவை குறைப்பதன் மூலம் ஆண்டு ஒன்றுக்கு 500 மில்லியன் யூரோக்களை சேமிக்க உள்ளது. இந்த தொகையை சிறுவர்களின் பற்களை பராமரிக்கும் மருத்துவ செலவுக்கு செலவிடவுள்ளது.

பிரான்சில் அரச மருத்துவ காப்புறுதி l’Assurance maladieயை மட்டுமே நம்பி, தனியார் மருத்துவ காப்புறுதி இல்லாமல் 2.5 மில்லியன் மக்கள் வாழ்கிறார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்