'இந்தியன் 2' அப்டேட்

28 ஐப்பசி 2023 சனி 11:12 | பார்வைகள் : 5157
ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் படம் 'இந்தியன் 2'. இப்படத்திற்கான அதிகாரப்பூர்வமான அப்டேட்கள் எதையும் தயாரிப்பு நிறுவனம் கடந்த சில மாதங்களாக வெளியிடவில்லை. சமூக வலைத்தளங்களிலும், இணையங்களிலும் மட்டுமே தகவலாகப் பரவி வந்தது.
இந்நிலையில் படக்குழு இப்படம் பற்றிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. “ரிசீவ்ட் காப்பி - சேனாபதி” என்ற போஸ்டர் ஒன்றுடன் நாளை காலை 11 மணிக்கு, என்ற அப்டேட் ஒன்றை தயாரிப்பு நிறுவனமான லைகா வெளியிட்டுள்ளது.
அநேகமாக படத்தின் வெளியீடு பற்றிய அறிவிப்பாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 2024ம் ஆண்டு வெளியாக உள்ள படங்களைப் பற்றிய அறிவிப்புகளை அந்தந்த நிறுவனங்கள் தற்போது வெளியிட்டு வருகின்றன.
கமல்ஹாசன் 233, 234 பற்றிய அப்டேட்டுகள் வந்து கொண்டிருக்கும் போது 'இந்தியன் 2' பற்றிய அறிவிப்பும் வருவது கமல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.