ஆங்கிலத்தில் Mr, Ms , Mrs என்று எழுதுவதன் விரிவாக்கம் தெரியுமா..?
28 ஐப்பசி 2023 சனி 11:14 | பார்வைகள் : 8164
நம் வாழ்வில் அன்றாடம் பேசப்படும் பல வார்த்தைகளை பற்றி நாம் அதிகம் யோசிக்கக்கூட மாட்டோம். எல்லோரும் சொல்கிறேன் என்ற நிலையிலேயே பல வார்த்தைகளை கடந்து விடுகிறோம். நமது முறையான மற்றும் முறைசாரா வாழ்க்கையின் ஒரு பகுதியான அத்தகைய வார்த்தை ஒன்று உள்ளது. சிறுவயதிலிருந்தே நாம் இதை எழுத்திலும் பேச்சிலும் பயன்படுத்துகிறோம், ஆனால் அதன் முழுமையான விரிவாக்கமோ அதன் பொருளோ தெரிவதில்லை.
பொதுவாக ஆங்கிலத்தில் பெயர் எழுதும்போது மதிப்பிற்காக சேர்க்கப்படும் அடைமொழி Mr என்பதை பயன்படுத்துவோம். அதுவே பெண்களுக்கு என்றால் Ms மற்றும் Mrs இரண்டு பயன்படுத்துவோம். இது ஏன் என்று எப்போதாவது நீங்கள் நினைத்தது உண்டா?அதன் விரிவாக்கங்கள் என்னவென்று தெரியுமா?இப்போ தெரிஞ்சுக்கோங்க.
1500 களில் ஆங்கிலத்தில் ஒரு மதிப்புமிக்க ஆணை மிஸ்டர் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது. அதன் சுருங்கிய வடிவமே Mr. இது திருமணம் ஆகாத மற்றும் திருமணம் ஆன ஆண்கள் என அனைவருக்கும் பொருந்தும்.
அதே காலகட்டத்தில் பெண்களை குறிக்க Miss என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது. ஒருவர் திருமணம் ஆனவர், ஆகாதவர் என்று எப்படி இருந்தாலும் , அவரை குறிப்பிடும்போது Ms என்ற அடைமொழி பயன்படுத்தப்பட்டது.
பின்னர் திருமணம் ஆன பெண்களை தனித்துவமாக காட்டவேண்டும் என்ற எண்ணம் உதித்துள்ளது. அதனால் mister என்ற வார்த்தையின் பெண்பால் பெயராக ஒரு வார்த்தை வேண்டும் என்று mistress என்ற வார்த்தை உருவாக்கப்பட்டது. அதன் சுருங்கிய வடிவமே Mrs. ஆங்கில வார்த்தையான mistress கொஞ்சம் திரிந்து இப்போது missus என்று குறிப்பிடப்படுகிறது.


























Bons Plans
Annuaire
Scan