கனேடிய ஆய்வாளர்களினால் கண்டுபிடிக்கப்பட்ட குட்டி ரோபோக்கள்!
28 ஐப்பசி 2023 சனி 12:34 | பார்வைகள் : 2074
கனடாவின் வாட்டார்லூ பல்கலைக் கழகத்தின் ஆய்வாளர்கள் இந்த குட்டி ரோபோவை கண்டு பிடித்துள்ளனர்.
இரசாயன பொறியியல் பேராசிரியர் ஹாமெட் ஷஸ்வான் இந்த ஆய்வுக் குழுவிற்கு தலைமை தாங்குகின்றார்.
மருத்துவ தேவைகளுக்காக பயன்படுத்தக் கூடிய வகையில் இந்த குட்டி ரோபோ தயாரிக்கப்பட்டுள்ளது.
உடலின் எந்தவொரு பாகத்திற்கும் சிரமமின்றி ஊடறுவி சிகிச்சை அளிக்க கூடிய வகையில் ஆபத்தற்ற பொருட்களை கொண்டு இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ரோபோக்கள் தவாரங்களைக் கொண்டு தயாரிக்கப்படுவதாகவும் ஒரு சென்றிமீற்றர் அளவிலான மிகச் சிறியவை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ரோபோக்கள் உடலுக்கு ஒவ்வாத நச்சுத்தன்மையை வெளிப்படுத்தாது என தெரிவிக்கப்படுகின்றது.
மனித திசுக்கள், கலன்கள் உள்ளிட்டனவற்றில் கூட இந்த ரோபோக்களினால் பயணிக்க முடியும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த ரோபோக்களின் அளவினை மேலும் குறைப்பதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.