சிறுமி உள்ளிட்ட மூவரை படுகொலை செய்த ஒருவர் கைது!

28 ஐப்பசி 2023 சனி 13:13 | பார்வைகள் : 7104
ஐந்து வயது சிறுமி மற்றும் அவரது தாயார் உள்ளிட்ட மூவரை கத்தியால் தாக்கி படுகொலை செய்த ஒருவரை ரீயூனியன் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பிரான்சின் கடல்கடந்த நிர்வாகப்பிரிவான La Réunion தீவில் இச்சம்பவம் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. நபர் ஒருவர் கத்தி ஒன்றை எடுத்துக்கொண்டு வீதியில் சென்ற பல்வேறு நபர்களை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். மொத்தமாக ஆறு பேர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.
அவர்களில் ஐந்து வயது சிறுமி மற்றும் அவரது தாய், வங்கி ஒன்றின் வாசலில் நின்றிருந்த ஒருவர் என மொத்தமாக மூவர் பலியாகியுள்ளனர்.
தாக்குதலாளி உடனடியாக கைது செய்யப்பட்டார். இந்த தாக்குதல் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதலின் பின்னணியில் எந்த பயங்கரவாத தொடர்புகளும் இல்லை எனவும், கைதான நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதான நபர் 38 வயதுடையவர் என அறிய முடிகிறது.