Paristamil Navigation Paristamil advert login

இனிப்பு பண்டங்களின் விலையேற்றம், இனிப்பை கசக்க வைக்கிறது.

இனிப்பு பண்டங்களின் விலையேற்றம், இனிப்பை கசக்க வைக்கிறது.

28 ஐப்பசி 2023 சனி 14:15 | பார்வைகள் : 7735


Halloween திருவிழா, கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வரும் காலகட்டத்தில், இனிப்பு பண்டங்கள் முதன்மை பெறுகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இக்காலகட்டத்தில் அதிகம் இனிப்பு பண்டங்களை உண்பதும், பரிசுப்பொருட்களாக பரிமாறுவதும் வழமையான தொன்று.

இவ்வருடம் அவற்றின் விலை முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 21% சதவீதத்தால் அதிகரித்துள்ளது. ஒரு chips பக்கட்டின் விலை 15% சதவீதத்தாலும், chocolats விலை12% சதவீதத்தாலும், sodas குளிர்பானங்களின் விலை 9% சதவீதத்தாலும் அதிகரித்து உள்ளது.

உலகச் சந்தையில் சீனியின் விலை என்றும் இல்லாத அளவுக்கு அதிகரித்தது உள்ளதாலும், எரிபொருட்களின் விலை அதிகரிப்பாலும் தாம் தங்களின் தயாரிப்புக்களின் விலையை அதிகரிக்க நேர்ந்தது என தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

வர்த்தக‌ விளம்பரங்கள்